பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரூ. 90 லட்சம் நிலம்  அபகரிப்பு: 4 பேர் கைது

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 பேரை காஞ்சிபுரம் மாவட்ட

Updated On :12 செப்டம்பர் 2013, 11:12 am IST

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 பேரை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுஜதா ஹரநாத், ரத்தினமாலா. இவர்கள் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் 27 சென்ட் காலிமனையை துரைபாபுவிடம் இருந்து வாங்கினர்.

இந்நிலையில் இந்த காலிமனை மீது வில்லங்கம் போட்டுப் பார்த்தனர். அப்போது கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சந்தானம் (49), சென்னை அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த மோகன்குமார் (38), கானாத்தூர் துரைராஜ் (38), பனையூர் சாதீக் பாட்சா (39) ஆகியோர் சேர்ந்து நிலத்தை அபகரித்தது தெரியவந்தது.

அதன் இன்றைய மதிப்பு ரூ. 90 லட்சம். இது குறித்து சுஜதா ஹரநாத், ரத்தினமாலா ஆகியோர் காஞ்சிபுரம் எஸ்.பி. விஜயகுமாரிடம் புகார் செய்தார்.

புகாரின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு  4 பேரையும் கைது

செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.